கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபையின் சிறப்பு கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. இதில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
முன்னதாக, ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் புதிய எம்எல்ஏக்களான சயந்திகா பந்தோபாத்யாய் மற்றும் ராயத் உசைன் சர்க்கார் ஆகியோரை ஆளுநர் ஆனந்த போஸ் பதவியேற்பு விழாவிற்கு ஆளுநர் மாளிகைக்கு அழைத்தார். கவர்னர் வராத பட்சத்தில் 2 எம்எல்ஏக்களும் சட்டசபை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில், ஆளுநரின் உத்தரவின் பேரில் இரு எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.