புதுடெல்லி: பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) வரைவு விதிகள் குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று கூறியதாவது:- ராகுல் காந்தி உட்பட சில அரசியல் தலைவர்கள் முற்போக்கான கல்வி சீர்திருத்தங்களை தங்களது காலாவதியான அரசியல் கட்டுக்கதைகளை காப்பாற்ற கற்பனை அச்சுறுத்தல்களாக மாற்றுவது வருத்தமளிக்கிறது. இந்த விதிகள் கல்வியின் எல்லைகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டவை மற்றும் அதைக் குறைக்கவில்லை.
அவர்கள் அதிக குரல்களைச் சேர்க்க முயற்சி செய்கிறார்கள் மற்றும் அவர்களை அமைதிப்படுத்தவில்லை. எதையும் எதிர்ப்பது அரசியலாகவே பார்க்கப்படுகிறது. இது நிச்சயமாக நல்ல அரசியல் அல்ல. இது அற்ப அரசியல். அரசியல் சாசனத்தை ஆதரிப்பவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் தலைவர்கள், யுஜிசி வரைவு விதிகளை எதிர்க்கும் முன் சிறிது நேரம் ஒதுக்கி அதைப் படிக்க வேண்டும்.

கருத்துகள் தெரிவிக்க நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, யுஜிசி வரைவு விதிகள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கடந்த 5-ம் தேதி இருந்த காலக்கெடு, இம்மாதம் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக யுஜிசி செயலாளர் மணீஷ் ஜோஷி தெரிவித்துள்ளார்.