![](https://vivegamnews.com/wp-content/uploads/2024/12/9458e3d0-af2c-11ef-bf13-0d5fafac0b95.jpg.webp)
புதுடெல்லி: காற்று மாசு அதிகமாக உள்ளதால் டெல்லியில் வாழ்வது பிடிக்கவில்லை என மத்திய அமைச்சர் கட்கரி தெரிவித்துள்ளார். பல்வேறு காரணங்களால் தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் சுவாசக்கோளாறு உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
![](https://vivegamnews.com/wp-content/uploads/2024/12/6791791-delhinithingadkaripollution-removebg-preview.jpg)
காற்றின் தரம் தற்போது மேம்பட்டு நேற்று 274 ஆக பதிவாகியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக காற்று மாசு குறைந்துள்ளது. கடந்த நவம்பருடன் ஒப்பிடுகையில் டெல்லி மக்கள் தற்போது எளிதாக சுவாசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “டெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசுபாடு எனக்கு நோய் தொற்றுக்கு ஆளாகிறது. இதனால், டெல்லியில் வாழ்வதும், டெல்லிக்கு செல்லவும் எனக்கு பிடிக்கவில்லை. “