புதுடெல்லி: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடுமையான முதுகுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கடுமையான முதுகுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் (ஜூலை 10) இரவு அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார், அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யப்பட்டது, அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் அறுவை சிகிச்சை நிபுணர் அமோல் ரஹேஜாவின் நேரடி கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை கூறியது.
ஆந்திராவில் லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது ராஜ்நாத் சிங்குக்கும் இதே போன்ற கடுமையான முதுகு வலி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.