ஆந்திர மாநிலம்: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல், ஒரு வருடத்தில் 450-க்கும் மேற்பட்ட திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, ஆண்டுதோறும், நவராத்திரி பிரம்மோற்சவம் என இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் தற்போது வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் 3 நாட்கள் நடைபெறும் இவ்விழா, வசந்த காலம் முடிந்து கோடைகாலத்தின் தொடக்கத்தை முன்னிட்டு நேற்று தொடங்கி இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் மலையப்ப சுவாமி தற்போது 4 மடங்களிலும் உலா வந்து அருள்பாலித்து வருகிறார். இதேபோல் பக்தர்கள் வடம் பிடித்து தங்க தேர் இழுத்து வருகின்றனர்.

இந்த 4 மாட வீதிகளிலும் பக்தர்கள் திரண்டு பக்தி பரவசத்துடன் கோவிந்தா.. கோவிந்தா என தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி தேவஸ்தானம் பொதுமக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் பிற தேவைகளை வழங்கி வருகிறது. இந்த வசந்த உற்சவத்தின் 3-வது நாளான நாளை ஸ்ரீ கிருஷ்ணர், பாமா ருக்மணி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமிகள் 4 மாட வீதிகளில் வீதிஉலா நடக்கிறது.
10.04.2025 அன்று ஆரம்பமான வசந்த உற்சவம் நாளை நிறைவடைகிறது. இதில், தங்க ரதத்தில் வசந்த மண்டபத்தை வலம் வந்த மலையப்ப பெருமான், வசந்த மண்டபம் சென்று, அங்கு திருமண்டபத்தில் நிறைவடைந்து, கோயிலை சென்றடைவார். கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது.