புதுடெல்லி: கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 73 வயதான ஜக்தீப் தன்கருக்கு கடந்த 9 ஆம் தேதி அதிகாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜக்தீப் தன்கருக்கு, இருதயவியல் துறைத் தலைவர் ராஜீவ் நரங்க் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சுகாதார அமைச்சர் நட்டா மற்றும் பாஜக. தேசியத் தலைவர் நேரில் வந்து அவரது நலம் விசாரித்தனர்.
ஜக்தீப் தன்கர் நேற்று உடல்நிலை மேம்பட்ட பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சில நாட்கள் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அவருக்கு சிகிச்சை அளித்த அனைத்து மருத்துவர்களுக்கும் ஜக்தீப் தன்கர் நன்றி தெரிவித்தார்.