புதுடெல்லி: தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக ரேகா சர்மா இருந்தார். இவரது பதவிக்காலம் ஆகஸ்ட் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், இந்த ஆணையத்தின் புதிய தலைவராக விஜய கிஷோர் ராஹத்கரை மத்திய அரசு நியமித்துள்ளது.
தேசிய மகளிர் ஆணைய சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.
அவர் 3 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை பதவியில் இருப்பார். அவரது நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயா ராஹத்கர் முன்பு மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராகவும், அவுரங்காபாத் மேயராகவும் பணியாற்றியுள்ளார். பாஜக மகளிர் அணித் தலைவராகவும், பாஜக தேசிய செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.