கேரளா: கேரளாவில் நிலச்சரிவு குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை உதாசீனப்பட்டதால் பல உயிர்களை பறி போய் உள்ளன என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள எகலாஜிகல் சென்சிடிவ் ஜோன் என தற்போது நிலச்சரிவை சந்தித்த பகுதிகளை குறிப்பிட்டிருந்த மாதவ் காட்கில் அறிக்கையின் பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டதால் நூற்றுக்கணக்கான உயிரிழப்பை கேரளா சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
13 ஆண்டுகளுக்கு முன் தாக்கலான காட்கில் அறிக்கையில், சூரல்மலை, முண்டக்கை, மேப்படி உள்ளிட்ட 18 கிராமங்களில் கட்டுமானங்கள் கூடாது என்று எச்சரிக்கப்பட்டது.
ஆனால், அதை அரசுகள் கண்டு கொள்ளாததால், மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கிய பகுதிகளான இவற்றில், சுற்றுலா விடுதிகள், தங்கும் விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், குடியிருப்புகள் என அதிகளவில் கட்டிடங்கள் கட்டப்பட்டன.
அதற்காக மலைப்பகுதியில் பள்ளங்கள் தோண்டப்பட்டதும் மண் தளர்வை ஏற்படுத்தி நிலச்சரிவு ஏற்பட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.