புதுடெல்லி: “தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக, பாஸ்போர்ட் சேவா தளம் ஆகஸ்ட் 29-ம் தேதி இரவு 8 மணி முதல் செப்டம்பர் 2-ம் தேதி காலை 6 மணி வரை செயல்படாது.
ஆகஸ்ட் 30-ம் தேதி அப்பாயிண்ட்மெண்ட் வைத்திருப்பவர்களுக்கு வேறு தேதி வழங்கப்படும்” என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தேதிகளில் குடிமக்கள் மட்டுமின்றி, வெளியுறவுத்துறை அதிகாரிகள், குடிவரவு பணியக அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் பிறரும் பாஸ்போர்ட் சேவா தளத்தை பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.