சென்னை; சருமம் பொலிவு பெற எளிமையான வழிமுறைகள் உங்களுக்காக. உணவு பழக்கவழக்கத்தினாலும் சுற்றுசூழலினாலும் நம் சருமம் மிக வேகமாக சிறுவயதிலேயே சுருங்கி வயதானவர்கள் போல் காட்சியளிக்கிறது. இவ்வாறு நம் முகத்திலும், கை கால்களிலும் உள்ள தோல் சுருக்கங்களை சரி செய்து, சருமம் பொலிவு பெற ஒரு எளிய வழிமுறையை காண்போம்.
தேவையான பொருட்கள்
ஆலிவ் ஆயில்
கற்றாழை
சர்க்கரை
தேன்
கிரீன் டீ
செய்முறை: ஒரு சிறு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை எடுத்துக்கொண்டு அதில் கற்றாழை ஜெல்லை சிறிது இட்டு ஒரு தேக்கரண்டி அளவு ஆலிவ் எண்ணையை ஊற்றி மூன்றையும் நன்கு கலக்கவும். நன்கு கலந்தபின் முகத்தில் தடவி 4 முதல் 5 நிமிடம் மசாஜ் செய்யவும்.
சிறிது நேரம் கழித்து ஒரு காட்டன் துணியை நீரில் நனைத்து முகத்தை துடைக்கவும். முகத்தை சோப்பு வைத்து கழுவுதல் கூடாது. முகத்தை துடைத்தபின் உங்கள் சருமத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றதை உங்களால் உணர முடியும்.
பின்பு, கிரீன் டீ-பையை கட் செய்து ஒரு கிண்ணத்தில் போடவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி நன்கு கலக்கவும். கலந்த கலவையை எடுத்து முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். இதிலிருக்கும் கிரீன் டீ தூள்கள் முகத்தை மசாஜ் செய்யும்போது சருமத்திற்கு ஆக்ஸிஜனை கொடுக்கும்.
தேன் கலந்திருப்பதால் முகம் உலராது. எனவே 30 நிமிடம் கழித்து துணியை நீரில் நனைத்து முகத்தை துடைக்கவும். அல்லது சோப்பு இல்லாமல் முகத்தை சுத்தம் செய்யவும். இப்போது, உங்கள் சருமம் மாற்றம் பெற்றிருப்பதையும் பொலிவடைந்து இருப்பதையும் மேலும் சருமத்திலிருந்த வறட்சி மற்றும் சுருக்கம் மறைந்திருப்பதையும் உங்களால் காண இயலும்.
இதை வாரம் 2 முறை 2 வாரங்கள் செய்ய, உங்கள் சருமம் சுருக்கம் இல்லாமல் ஆரோக்கியத்துடனும் பொலிவுடனும் இருக்கலாம்.