By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    நேர்காணலை பாதியில் நிறுத்திய டிரம்ப்… என்.பி.சி. தொகுப்பாளருடன் கடும் வாக்குவாதம்!
    1 Min Read
    ஹோர்முஸ் ஜலசந்தி அருகே 4 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: அமெரிக்கா தகவல்
    1 Min Read
    இம்ரான்கான் தம்பதியை நள்ளிரவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சர்ச்சை
    1 Min Read
    ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய முடியவில்லை: ஐ.நா. முகமை
    1 Min Read
    மோடி என் நல்ல நண்பர்; இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் விரைவில் – டிரம்ப்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    இந்தியா – இந்தோனேசியா உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை… மோடி பயணத்திற்கு முன் முக்கிய சந்திப்பு!
    1 Min Read
    நடிகர் சலீம் குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்… “மறக்க முடியாத கலைஞர்” என புகழாரம்!
    1 Min Read
    அமெரிக்காவில் தெலுங்கானா இளைஞர் சுட்டுக்கொலை… உடலை இந்தியா கொண்டு வர குடும்பம் கோரிக்கை!
    1 Min Read
    கடும் வெயில் எதிரொலி… தெலுங்கானாவில் பள்ளிகள் திறப்பு ஜூன் 15-க்கு ஒத்திவைப்பு!
    1 Min Read
    திருமணத்திற்குப் பிறகு கணவரிடம் உண்மையை கூறிய இளம்பெண்… 6 ஆண்டுகள் பழைய பாலியல் வழக்கில் நடவடிக்கை!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    “காவல் நிலையங்கள் தூய்மையாக இருக்க வேண்டும்”… சென்னை கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!
    1 Min Read
    ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை நாளை தொடக்கம்?… பெண்கள் பாதுகாப்புக்கான புதிய திட்டம்!
    1 Min Read
    போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிரடி வேட்டை… ‘மேக்ஸ்’ மோப்பநாய் களமிறங்கியது!
    1 Min Read
    ESIC மருத்துவ இடஒதுக்கீட்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஜூன் 21 கடைசி நாள்
    1 Min Read
    தமிழகத்தில் வெயில் சதமடிப்பு: மீனம்பாக்கத்தில் 104.72 டிகிரி பாரன்ஹீட் பதிவு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மணப்பெண்களின் கைகளை சிவக்கச் செய்யும் மருதாணி!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மகளிர் செய்திகள்` > மணப்பெண்களின் கைகளை சிவக்கச் செய்யும் மருதாணி!
மகளிர் செய்திகள்`

மணப்பெண்களின் கைகளை சிவக்கச் செய்யும் மருதாணி!

Nagaraj
Last updated: May 14, 2025 5:35 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

புதுடில்லி: திருமணத்திற்கான தேதி நிச்சயம் ஆனது முதலே மணப்பெண் தன்னை அழகாக வைத்துக் கொள்வதிலும், அலங்கரித்துக் கொள்வதிலும் முழுக்கவனம் செலுத்துவது உண்டு. நகை, ஆடை அலங்காரத்தைப்போன்று தங்கள் கை மற்றும் கால்களை மருதாணி (மெஹந்தி) மூலம் அழகுபடுத்துவதற்கும் மணப்பெண்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். அண்மைக்காலமாக திருமண நிச்சயதார்த்தம் போல் மணப்பெண்ணுக்கு மருதாணி இட்டு அழகு படுத்துவதும் தனிச்சடங்காக ஆட்டம்-பாட்டத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

திருமணம் நடைபெறுவதற்கு முந்தைய தினம் இந்த கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.முஸ்லிம் சமூகத்தில், இந்த விழாவின் போது மணப்பெண்ணை நடுவில் நிறுத்தி தோழிகள் புடைசூழ நின்று அவருக்கு மருதாணி இடுவதும், பாட்டுப்பாடுவதும் தனிச்சிறப்பு ஆகும். தற்போது ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து திருமணங்களிலும் இத்தகைய சடங்குகள், திருமணத்தைப்போன்ற உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. நாணத்தால் முகம் சிவந்து நிற்கும் மணப்பெண்களின் கைகளை சிவக்கச் செய்யும் மருதாணி பற்றி இனி பார்ப்போம்.

மணப்பெண் அலங்காரத்தில் முக்கிய இடம் பிடிக்கும் மருதாணி, தொடக்கத்தில் உள்ளங்கையை மட்டுமே அழகுபடுத்த பயன்படுத்தப்பட்டது. தற்போது உள்ளங்கை மட்டுமின்றி புறங்கையிலும், மூட்டு வரை அழகிய ஓவியம் போல் மருதாணி இடப்பட்டு வருகிறது. அரபிக் வடிவம், பாகிஸ்தான் வடிவம் என பல்வேறு வடிவங்களில் மருதாணி இடப்பட்டாலும், ராஜஸ்தானி வடிவம்தான் தற்போது மிக பிரபலம். அழகிய வடிவமைப்புகள் செய்வதற்கு சிலர் ஒருநாள் முழுவதையும் எடுத்துக் கொள்வது உண்டு.

நல்ல ஓவியத்திறன், கற்பனைத் திறன் உள்ளவர்கள் மூலம் மருதாணி வைத்துக்கொண்டால் அது காண்போரை கவரும் விதத்தில் அமையும். மருதாணி நன்கு சிவப்பு நிறமாக தோன்ற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இதற்காக சில எளிய முறைகளை பின்பற்றினால்போதும். யூகலிப்டஸ் தைலம் சிறிதளவை கையில் தடவி, பின்னர் மருதாணி இட்டுக் கொண்டால் நாம் எதிர்பார்க்கும் சிவந்த நிறம் நிச்சயம் கிடைக்கும்.

மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்து, மருதாணி இட்ட கைகளை லேசாக சூடுபடுத்துவது, கிராம்பு போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் ஆவிபிடிப்பது போன்றவை அடர்த்தியான நிறம் கிடைக்கச் செய்யும். சர்க்கரை, எலுமிச்சை கலந்த தண்ணீரில் கையை நனைப்பதும் நல்ல பலன் கிடைக்க வழிவகுக்கும். மருதாணி இட்டபின் குறைந்தபட்சம் ஒன்றரை மணிநேரமாவது அதை கலைக்காமல் அப்படியே வைத்திருக்க வேண்டும். ஒருநாள் முழுவதும் அதை மாற்றாமல் வைத்திருப்பது கூடுதல் நிறம் பெற காரணமாக இருக்கும்.

மருதாணி காய்ந்தபின் குறைந்தபட்சம் 6 மணி நேரம் வரை தண்ணீரில் கையை நனைக்காமல் இருப்பது நல்லது. இது மருதாணியின் நிறம் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்கச் செய்யும். சோப்பு, எண்ணை போன்றவற்றை பயன்படுத்தும்போது மருதாணியின் நிறம் மங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மருதாணி இட்டவுடன் தூங்கச் சென்றால் நமது உடைகளில் எல்லாம் அது பட்டு, துணிகளில் கறை ஏற்படும். இதை தவிர்க்க மருதாணி இட்ட கைகளில் கையுறையை (கிளவுஸ்) போட்டுக் கொள்ளலாம்.மருதாணியின் நிறம் மங்கத் தொடங்கும்போது, சில இடங்களில் அழிந்தும், சில இடங்களில் அடர்த்தியான நிறத்துடனும் காணப்படும். இது பார்ப்பதற்கு அழகாக இருக்காது. இவ்வாறான நேரத்தில், உடல் ஒப்பனை மருந்து (காஸ்மடிக் பாடி பிளீச்) மூலம் கைகளை கழுவி மருதாணியின் நிறத்தை முற்றிலும் அழித்துவிடலாம்.

You Might Also Like

எலுமிச்சையை பயன்படுத்தி சருமத்தை அழகுபடுத்துவது எப்படி?

முடி உதிர்வை எதிர்த்து போராடும் பூண்டு!

வீட்டிலேயே எளிய முறையில் ஹேர் கண்டிஷனர் செய்யும் விதம்

இளமையை தக்கவைத்து புத்துணர்வு அளிக்கும் இந்துப்பு!

சருமம் பொலிவடைய எளிய அழகுக் குறிப்புகள் உங்களுக்காக

TAGGED:beautyBridehennaredWeddingசிவப்பு நிறம்திருமணம்மணப்பெண்மெஹந்தி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

“உதயநிதி தலைமையில் திமுக பெரும் தோல்வி சந்திக்கும்”… மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?