சென்னை: முகத்தை அழகாக வைத்துக் கொள்ள பல மணி நேரம் செலவிடும் பெண்கள் தங்களின் கை விரல்கள் மற்றும் நகங்களை பராமரிக்க நேரம் செலவழிப்பதில்லை.
விரல்கள் அழகாக காட்சியளிக்க வேண்டுமென்றால் நகங்கள் அழகாக இருக்க வேண்டும். இதோ உங்களுக்காக நகங்கள் அழகாக, நக பராமரிப்பிற்கான ஆலோசனைகள்.
சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு சிரமமாக இருக்கும். எனவே விரல்களை 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் வெட்டலாம். நகங்கள் அடிக்கடி உடைந்து போனால், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை ஊறவைத்து பின்னர் கழுவினால் நகங்கள் உறுதியாகும்.
நெயில் பாலீஷ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவதைவிட நெயில் பாலீஷ் ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்தி வந்தால் மிகவும் நல்லது.
தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால், விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும். தினமும் நெயில் பாலீஷ் உபயோகிப்பதால் நகங்களின் நிறம் மங்கி காணப்பட்டால் நெயில் பாலிஷ் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால் நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரத்தன்மையின்றி இருக்கும்போது ஷேப் செய்ய வேண்டும்.