
நுரையீரல் என்பது நம் உடலில் மிகவும் முக்கியமான உறுப்பாகும். தற்போதைய மாசுபட்ட சூழ்நிலைகளில், நுரையீரலின் ஆரோக்கியம் பலருக்குமே பாதிக்கப்படுகிறது. இதனால், சிலர் சிறிய வேலை செய்தாலே மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. சிலர் திடீரென சுவாசிக்க சிரமப்படுகின்றனர். காலப்போக்கில் நுரையீரல் தனது இயல்பான செயல்பாடுகளை இழந்து, முழுமையாக விரிவடைய முடியாமல் ஆக்ஸிஜனை சீராக ஏற்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இவ்வாறான சூழ்நிலையில், நுரையீரலை சுத்தப்படுத்துவதும், அதன் செயல்திறனை மேம்படுத்துவதும் அவசியமாகிறது. அதற்காகவே இயற்கையான சில வழிகளை பின்பற்றுவதன் மூலம் நமக்கு நன்மை ஏற்படும். முதலில், ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் நுரையீரலின் திறனை மேம்படுத்தி, அதிக ஆக்ஸிஜனை உடலில் கொண்டு செல்ல உதவுகின்றன. இது தினமும் செய்யும் பழக்கமாக இருந்தால் சுவாசத் தசைகள் வலிமை பெறும்.
தண்ணீர் குடிப்பதையும் தவறவிடக்கூடாது. நுரையீரலை சுத்தப்படுத்தும் போது, உடலை நீரேற்றமாக வைத்திருப்பது முக்கியமான ஒன்று. இது சளியை மெலிதாக்கி வெளியேற்ற உதவுகிறது. மேலும், நீராவி சிகிச்சை மூலமாக சுவாசக் குழாய்களில் உள்ள அழுக்கு மற்றும் சளியை அகற்ற முடிகிறது.
வழக்கமான உடற்பயிற்சி, குறிப்பாக நடைப்பயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டம் போன்றவை நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. இது மட்டுமல்லாது, ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகள், குறிப்பாக பெர்ரி, கீரை மற்றும் மஞ்சள் போன்றவை நுரையீரலில் வீக்கம் மற்றும் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கின்றன.
காற்று மாசுபாட்டைத் தவிர்ப்பதும் நுரையீரலுக்குச் செய்ய வேண்டிய ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாகும். வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிவது பாதுகாப்பாக இருக்கும். மேலும், டிரைனேஜ் போஸ் எனப்படும் ஒரு பயிற்சியையும் செய்யலாம். இது நுரையீரலின் உள்ளிருக்கும் சளியை வெளியேற்றுவதற்கு உதவுகிறது.
மூலிகை டீக்கள், குறிப்பாக இஞ்சி, அதிமதுரம், மிளகுக்கீரை ஆகியவற்றால் தயாரிக்கப்படும் டீக்கள் சுவாசக் குழாய்களை தணித்து, சளி மற்றும் எரிச்சலை குறைக்கின்றன. இதுவும் நுரையீரலுக்கு நன்மை தரும்.
முடிவாக, சில எச்சரிக்கை அறிகுறிகளை நமக்கே நாமே கவனிக்கத் தெரிய வேண்டும். தொடர்ந்து இருமல், மூச்சுத் திணறல், மார்பு இறுக்கம் மற்றும் வலிக்காமல் சோர்வடைவது போன்றவை நுரையீரல் சிக்கலின் அறிகுறிகள். அதில் நிறமாற்றம் உள்ள சளி இருக்கும் பட்சத்தில், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
நுரையீரல் ஆரோக்கியத்தைப் பேண, இயற்கையாகவும் எளிதாகவும் நாம் செய்யக்கூடிய இந்த வழிகளை நாளாந்த வாழ்க்கையில் அடையாளப்படுத்திக் கொண்டு செயல்படுவது, நம் சுவாச வாழ்வைச் சிறப்பாக பாதுகாக்கும்.