நம் நாட்டில் துளசி மிகவும் புனிதமானதாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இதல் ஏறாளமான மருத்துவ குணங்கள் இருப்பதால் மக்களால் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்து மதத்தில் தெய்வமாக வழிபடப்படும் துளசி பல நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது. துளசியை உட்கொள்வதால் சளி மற்றும் இருமல் நீங்குவது மட்டுமின்றி செரிமான பிரச்சனைகளும் நீங்கும்.
இந்த துளசி நீரை தினமும் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க… இதைப் படித்த பிறகு, தினமும் காலையில் எழுந்தவுடன் துளசி தண்ணீரைக் குடிக்கும் பழக்கத்தை நீங்கள் தொடங்குவீர்கள்..
துளசி இலையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சுத்தமாகும். துளசி உடல் வெப்பநிலையையும் கட்டுக்குள் வைத்திருக்கும். அதே சமயம் துளசி இலைகள் உடல் எடையைக் குறைக்கும். மேலும் உடலில் கொழுப்பு சேர்வதையும் தடுக்கிறது. துளசி இலைகள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கும் நீரை மழைக்காலங்களில் குடித்து வந்தால், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், சளி மற்றும் தொண்டை பிரச்சனைகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. துளசியை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி மற்றும் வாயுத்தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2-3 துளசி இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும். வயிற்றுவலியால் அவதிப்படுபவர்கள் இளநீரில் துளசி இலையின் சாறு எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். பருவகால நோய்த்தொற்றுகளில் இருந்து விடுபடவும், செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடவும், தேநீர் தயாரிக்கும் போது, சில துளசி இலைகளை கொதிக்க வைத்து குடிக்கவும்.
துளசி சாறு மற்றும் துளசி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் நோய்கள் வராமல் தடுக்கலாம். ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து சிறிது துளசி இலைகளை போட்டு 2-3 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க வைத்து இறக்கவும். குளிர்ந்த பிறகு, தண்ணீரை வடிகட்டி சூடாகவோ அல்லது குளிராகவோ குடிக்கலாம். மழைக்காலத்தில் சளி மற்றும் தொண்டை வலியால் பலர் அவதிப்படுகின்றனர். இதனால் அடிக்கடி அவதிப்படுபவர்கள், காலையில் எழுந்தவுடன் துளசி நீரைக் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். மேலும், சூடாக ஏதாவது குடிக்க வேண்டும் என நினைத்தால், துளசி தண்ணீர் செய்து குடிக்கவும். சர்க்கரை அளவை சீராக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கு துளசி நீர் மிகவும் நல்லது.
ஏனெனில் துளசி நீரை குடிப்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். எனவே உங்கள் இரத்த சர்க்கரையை இயற்கையாக குறைக்க விரும்பினால், துளசி தண்ணீரை குடிக்கவும். துளசி நீரை தினமும் குடிப்பதன் மூலம் உடலின் மூலைகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. உங்கள் உடலை சுத்தமாக வைத்திருக்க விரும்பினால், துளசி நீர் உங்களுக்கு மிகவும் உதவும். நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும் துளசி நீரை தினமும் குடிப்பதன் மூலம் உடலின் மூலைகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. உங்கள் உடலை சுத்தமாக வைத்திருக்க விரும்பினால், துளசி நீர் உங்களுக்கு மிகவும் உதவும்.
வயிற்று பிரச்சனைகள் துளசி நீரை குடிப்பதால் செரிமான பிரச்சனைகளை தவிர்க்கலாம். முக்கியமாக துளசி நீரை குடிப்பதன் மூலம் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனைகள் நீங்கும். அதுமட்டுமின்றி, வயிறு ஆரோக்கியமாக செயல்படுகிறது. காய்ச்சல் உடலில் ஏதேனும் தொற்று ஏற்பட்டால் காய்ச்சல்தான் முதல் அறிகுறி. காலையில் எழுந்தவுடன் துளசி நீரை அருந்தினால் வைரஸ் தொற்றுகளால் ஏற்படும் காய்ச்சலில் இருந்து விடுபடலாம். மேலும் துளசியில் உள்ள மருத்துவ குணத்தால் வைரஸ் தொற்றுகள் விரைவில் குணமாகும்.