ஆயுர்வேதம் குறிப்பிடும் பல மருத்துவ குணங்களில் முக்கியமானது வெந்தயம். வெந்தய விதைகளும், அதில் ஊறவைத்து தயாரிக்கப்படும் வெந்தய நீரும், பாரம்பரியமாக உடல்நல பராமரிப்பில் முக்கிய இடம் பெற்றுள்ளன. வெந்தய நீர் இன்று பலர் தினசரி பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
வெந்தய விதைகளில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதம், ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற முக்கிய சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. மருத்துவர் பவன் குமார் கூறுகையில், வெறும் வயிற்றில் வெந்தய நீரை தினமும் ஒரு கிளாஸ் குடிப்பதன் மூலம் உடலில் சக்தி, சுறுசுறுப்பு அதிகரித்து, ஆரோக்கியம் மேம்படும் என்று தெரிவிக்கிறார்.

இதனுடைய மிக முக்கியமான நன்மை நீரிழிவு நோயாளிகளுக்காகவே. வெந்தய நீர் உடலின் இன்சுலின் செயல்பாடுகளை மேம்படுத்தி, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. அதோடு, கொழுப்பை குறைத்து உடல் எடையை சீராக வைத்திருக்கிறது. செரிமானத்தையும் சரியாக வைத்து, சருமத்திற்கு பளபளப்பும் தருகிறது.
வெந்தய நீரை தயாரிக்க ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கலாம். அந்த விதைகளை மென்று சாப்பிடுவதும் கூடுதல் நன்மைகளை தரும்.
எல்லாவற்றையும் விட முக்கியமானது, எந்தவொரு இயற்கை வைத்தியத்தையும் தொடர்ந்து எடுத்துக்கொள்வதற்கு முன், ஒருவர் உடல் நிலையைப் பொருத்து மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும். வெந்தயம் கூட அதிகமாக உட்கொள்ளும் போது சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம் என மருத்துவர் எச்சரிக்கிறார்.