சென்னை: பிஸ்தா பருப்பில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், வைட்டமின் பி6 மற்றும் மாங்கனீஸ் அதிக அளவு உள்ளன.
பிஸ்தா பருப்பு கர்ப்ப காலத்தில் உடலுக்குத் தேவையான மற்றும் முக்கியமான பல ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கிறது.
பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ ஆனது, புறஊதாக் கதிர்களால் தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும், தோல் புற்றுநோய் வராமல் இருக்கவும் உதவுகிறது. தொடர்ந்து பிஸ்தா சாப்பிட்டு வந்தால் உடல் எடை, இடுப்பு சுற்றளவைக் குறைக்கும்.
பிஸ்னாதா பருப்பு இதயத்திற்கு நன்மை தரும் கொழுப்பை கொண்டிருப்பதால் பல்வேறு இதய வியாதிகளை தடுக்கும் தன்மை கொண்டது. பிஸ்தா சாப்பிடுவது, உடலில் உள்ள கெட்ட எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கும், ஆரோக்கியம் தரும் எச்டிஎல் கொழுப்பை அதிகரிக்கும். டைப் 2 நீரிழிவு நோயில் இருந்தும் பிஸ்தா காக்கிறது.
பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊறவைத்து தினமும் மாலையில் சாப்பிட்டால் ஞாபகச் சக்தி அதிகரிக்கும். பிஸ்தா பருப்புக்களில் உங்கள் குடலுக்கு நன்மை விளைவிக்கும் நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. உங்கள் வயிறு எளிதில் நிரம்பியதை போன்ற உணர்வை கொடுக்கும். அதேசமயம், ஜீரணத்தை ஊக்கப்படுத்தி, மலச்சிக்கலை குறைக்கும்.
மன அழுத்தத்தினால் வரும் இரத்தக் கொதிப்பை பிஸ்தா பருப்பு கட்டுப்படுத்தும். பிஸ்தாவில் அதிக அளவில் உள்ள வைட்டமின்கள் உள்ளது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. அதோடு இது, செல்களுக்கு ஆக்சிஜனையும் கொடுக்கிறது.
பிஸ்தாவில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட், கரட்டினாய்ட்ஸ் உள்ளிட்டவை ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவுகிறது.