சென்னை: வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகள் உள்ளன.
வாழைப்பூவின் முதல் நன்மையாகப் பார்க்கப்படுவது பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகளை சரிசெய்யும். வெள்ளைப்படுதல், வயிற்று வலி பிரச்னைகளுக்கு சரியான தீர்வாகும்.
ரத்தத்தில் தேவையில்லாத கொழுப்புகளை சரிசெய்யும். மேலும் ரத்த ஓட்டம் சீராகும். வயிற்று வலி உள்ளிட்ட வயிற்றுப் பிரச்னை உள்ளவர்கள் வாழைப்பூ சாப்பிடலாம். உடல் வெப்பநிலையை குறைக்கும் தன்மை கொண்டது.
மலட்டுத்தன்மை பிரச்னை உள்ளவர்களும் வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். ரத்த அழுத்தம், ரத்த சோகை உள்ளவர்கள் சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த மருந்து என்று சொல்லலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.