உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அளிக்க தினமும் போதுமான தண்ணீர் குடிப்பது அவசியம். தண்ணீர் உடலின் வெப்பத்தை சமநிலையில் வைத்திருக்கவும், செரிமானத்தை எளிதாக்கவும், கழிவுகளை நீக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. சிலர் பழங்களை சாப்பிட்ட பிறகு உடனே தண்ணீர் குடிப்பது நல்லதா, கெடுதலா என குழப்பமடைந்து இருப்பார்கள். உண்மையில் பழங்களின் மூலமாகவே உடலுக்கு தேவையான அளவு நீர்ச்சத்து கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அதிக நீர்ச்சத்து கொண்ட பழங்களை சாப்பிட்ட பிறகு உடனடியாக தண்ணீர் குடிப்பது சில நேரங்களில் உடலின் செரிமான செயல்முறையை பாதிக்கக்கூடும். இது வயிற்றில் உள்ள அமிலங்களுடன் கலந்து ஈஸ்ட் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இதனால் வாயுத்தொந்தரவு, அடி வயிற்று வலி, மற்றும் உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக தர்பூசணி போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களுக்குப் பிறகு தண்ணீர் குடிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
இதேபோல, செரிமான அமைப்பில் உள்ள pH நிலைமை பாதிக்கப்படும் போது, அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். தண்ணீர் உடனடியாக குடிக்கும்போது, அது காஸ்டிரிக் அமிலத்தை கரைத்து விடும். இது உணவின் முழுமையான செரிமானத்தைக் குறைத்து, சில நேரங்களில் ரத்த சர்க்கரை அளவு கூட அதிகரிக்க வழிவகுக்கும். இந்த நிலை நீடித்தால் நீரிழிவு, சிறுநீரக கோளாறுகள், மற்றும் இதய சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
எனவே பழங்களை சாப்பிட்ட பிறகு குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை தண்ணீர் குடிப்பதை தாமதப்படுத்துவது நல்லது. குறிப்பாக சிட்ரஸ் வகை மற்றும் ஈஸ்ட் நிறைந்த பழங்களுக்குப் பிறகு தண்ணீர் குடிக்க வேண்டாம். பழங்களில் உள்ள இயற்கை நீர்ச்சத்து போதுமானதால், உடனடியாக தண்ணீர் தேவைப்படாது. இந்த பழக்கத்தை பின்பற்றுவதன் மூலம் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.