சென்னை: அதிசய மூலிகை எனக் கூறப்படும் இஞ்சியின் பலனை முழுமையாக பெற தோலை நீக்க கூடாது என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
பெரும்பாலானோர் இஞ்சியை அதன் தோலை நீக்கியே பயன்படுத்துகின்றனர். உணவில் சேர்க்கும் போது இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு பயன்படுத்தும் பழக்கம் பலருக்கு உள்ளது. அதிசய மூலிகை எனக் கூறப்படும் இஞ்சியின் பலனை முழுமையாக பெற தோலை நீக்க கூடாது என ஹார்வர்ட் பல்கலைக்கழக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இஞ்சித் தோலை நீக்காமல் பயன்படுத்தினால் மிகவும் நல்லது என்கின்றனர். இஞ்சியின் உள் பகுதியின் இருப்பதை விட, அதன் தோலில் இரண்டு மடங்கு அதிக பாலிஃபீனால்கள் இருப்பதால் அவை உங்களுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும்.
தேநீர் முதல் பல உணவுகளில் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. இஞ்சியை சேர்ப்பதால் தேநீருக்கும், உணவுக்கும் சுவையை மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் பெரும் நன்மை பயக்கும். அதனால், இஞ்சியை நன்றாக கழுவி பின்னர், தோலுடன் பயன்படுத்தும் பழக்கத்தை பின்பற்றவும். தேநீரில் இஞ்சியை தோலை நீக்காமல் சேர்க்கவும். இதானால், இஞ்சியின் முழு பயனை அடையலாம்.
இஞ்சியை உட்கொள்வது மாதவிடாய் வலிக்கு நிவாரணம் அளிக்கிறது. இதனுடன், கீல்வாத நோயாளிகளுக்கு உள்ள வீக்கத்தைக் குறைப்பதிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இஞ்சி சாப்பிடுவதால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்பட்டு நீண்ட நேரம் பசி எடுக்காது. அதன் காரணமாக எடை இழப்பிற்கு பெரிதும் உதவுகிறது.
இஞ்சியில் மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளன. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் வீக்கம் எதிர்ப்பு கலவைகள் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது