சென்னை: வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம். வெந்தய கீரை நம் உடலில் ஏற்படும் பல முக்கியமான பிரச்சினைகளைத் தீர்க்கிறது.
தொடர்ந்து வெந்தயக் கீரையை சாப்பிடுவதால் ஜீரண சக்தி அதிகரிக்கும். பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. மேலும் நீரிழிவுக்கு மருந்தாக உள்ளது. குறிப்பாக தொப்பையை குறைக்க வெந்தய கீரையை டீ போன்று காலை வேளையில் குடித்து வந்தால் உடனடி தீர்வு கிடைக்கும்.
இந்த டீயை எப்படி தயாரிக்கலாம்? இதன் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வெந்தய கீரை -1 கைப்பிடி
மஞ்சள் – கால் ஸ்பூன்
தண்ணீர் – 200 மி.லி
செய்முறை: வெந்தய கீரை, மஞ்சள் இவற்றை கொதிக்கும் தண்ணீரில் போட்டு டீ தயாரிக்க வேண்டும். இந்த டீயை காலையில் குடித்து வந்தால் தொப்பையுடன் சேர்த்து உடல் எடையும் குறையும். இந்த டீயை தொடர்ந்து 1 மாத காலம் குடித்து வந்தால் உடல் எடை கிடுகிடுவென குறைந்து விடும். அத்துடன் உடலில் உள்ள கொழுப்புகளையும் இது நீக்கி விடும்.
வெந்தய டீ செரிமான பிரச்சனைகளோடு உடலில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலையும் படிப்படியாக குறைத்து விடும். இதனால் இதய பாதிப்புகள் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம். மேலும், இரத்த நாளங்களில் உண்டாக கூடிய அடைப்புகளையும் இந்த டீ ஏற்படாமல் பார்த்து கொள்ளும்.