சென்னை: கோடை பருவத்தில் பசியின்மை அதிகரிக்கும். வெப்பநிலை அதிகரிப்பால் இவை உண்டாகிறது என்றாலும் நமது வாழ்க்கை முறை மற்றும் பழக்கம் போன்றவையும் இதற்கு காரணமாகின்றன.
இந்த பருவகாலத்தில் உடலை குளிர்ச்சியாக சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.
ஊறுகாய்கள் – ஊறுகாய் வாயை புளிக்க வைக்கும். மேலும் இதில் சோடியம் அளவு அதிகமாக இருப்பதால் நீர் தேக்கம், நீர் வீக்கம் உண்டாகலாம்.
ஊறுகாய் சாறு அதிகம் சேர்த்தல் அஜீரணம் கூட உண்டாகலாம். சோடியம் அதிகம் உள்ள உணவுகள் தொற்று மற்றூம் புண்களை தூண்டும். எனவே கேடையில் உறுகாய் சாப்பிடுவதை குறைக்க வேண்டும்.
ஐஸ்க்ரீம் – ஐஸ்க்ரீமில் அதிக கொழுப்புகள் புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இது செரிமானத்தின் போது உடலை வெப்பமாக்குகிறது. அதை தவிர்க்க வேண்டும். ஐஸ்க்ரீம் தொண்டை வலி மற்றும் காய்ச்சலை உண்டாக்கலாம்.
வறுத்த உணவுகள் – கோடை மோசமானதாக இருக்கும் போது வறுத்த உணவுகள் எளிதில் ஜீரணமாகாது. ஆனால் அதை உணராமல் அடிக்கடி பக்கோடா, போண்டா, பஜ்ஜி என்று சாப்பிடுவது உங்கள் செரிமானத்தை மேலும் மோசமாக மாற்றுகிறது. வறுத்த உணவுகள் ஈரப்பதமான நாட்களில் சருமத்தை எண்ணெய் மிக்தாகி முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளை உண்டாக்குகிறது. மேலும் செரிமான அமைப்பை தொல்லை செய்கிறது.
இறைச்சி – எளிதில் ஜீரணிக்க முடியாத உணவில் இதுவும் ஒன்று. கோடைகாலத்தில் அதிகமாக இறைச்சி எடுப்பது செரிமான அமைப்பின் அழுத்தத்தை அதிகரிக்க செய்யலாம். இதில் அதிக அளவு கொழுப்புகள் புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இது செரிமானத்தின் போது உடலை வெப்பமாக்குகிறது. வெப்ப நிலை அதிகரிப்பில் இந்த வகை உணவுகள் மேலும் உடல் வெப்பத்தை அதிகரிக்க செய்கிறது.
ஏனெனில் செரிமான நெருப்பு உச்சத்தில் இருக்கும் நேரம் இது. இந்த நேரத்தில் குளிர்ச்சியான தயிர், நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், பழச்சாறுகள், நீர்ச்சத்து மிக்க காய்கறிகள், எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகள் போன்றவற்றை சேர்ப்பது வெப்பத்தை எதிர்கொள்ள உதவும்.