பலர் இந்த டயட் முறையை பின்பற்றலாம் என்ற சந்தேகம் உள்ளதா? ஏதாவது பிரச்சனை, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை வருமா? வெள்ளரி உணவு என்பது விரைவான எடை இழப்புக்கான பிரபலமான குறுகிய கால உணவாகும். இந்த டயட்டை மிக சரியாக பின்பற்றினால், வெறும் 7 நாட்களில் 7 கிலோ வரை உடல் எடையை குறைக்கலாம்.
வெள்ளரிக்காய் டயட் என்றால் வெள்ளரியை மட்டும் சாப்பிடுவது அல்ல. பல ஆரோக்கிய உணவுகளுடன், வெள்ளரிகளை அதிக அளவில் எடுத்துக்கொள்வது நல்லது. முட்டை, மெலிந்த இறைச்சி, கோழி, மீன், கொட்டைகள் மற்றும் பனீர் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை வெள்ளரிகளுடன் சேர்த்து உண்பதில் டயட் கவனம் செலுத்துகிறது.
அதே போல இந்த டயட் முறை “உனக்கு பசி எடுக்கும் போதெல்லாம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடு” என்கிறது. இருப்பினும், பொதுவாக வெள்ளரிகள் சத்தானவை மற்றும் கலோரிகள் குறைவாக இருக்கும். ஆனால் வெள்ளரிகளில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை.
எனவே வெள்ளரிக்காய் உணவை ஆரோக்கியமாக வைத்திருக்க, நமது அன்றாட ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் மற்ற சத்தான உணவுகளுடன் அதை இணைக்க வேண்டும்.