சென்னை: வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது. வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன.
மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன. வெந்தயத்தில் இரும்புச் சத்து இருப்பதால் இரத்த விருத்தி ஏற்படும்.
உணவில் வெந்தயம் அடிக்கடி சேர்த்து வந்தால் மலச்சிக்கல் வராது. ஒரு டம்ளர் மோரில் சிறிது வெந்தயம், சீரகப் பொடி கலந்து குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும். இரவில் வெந்தயத்துடன் ஒரு டம்ளர் அளவு நீரினை ஊறவைத்து அதிகாலையில் வடிகட்டி எடுத்து வந்தால் உடல் சூடு தணியும்.
வெந்தயத்துடன் தேன் சேர்த்து எடுத்துக் கொண்டால் சிறந்த பலன் கிடைக்கும். வெந்தய கீரையுடன் அத்தி பழம், உலர் திராட்சையை சிறிது சேர்த்து தேநீராக்கி சாப்பிடுவதால் உடலினுள் ஏற்படும் பிரச்சினைகள் விலகும்.
வெந்தயத்தை நீர் ஊற்றி வேகவைத்து வேகவைத்த நீரை தினமும் பருகிவந்தால் மாரடைப்பு, மூச்சு முட்டுதல், ஆஸ்துமா ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. ஜீரண உறுப்புகளை சரி செய்து செரிமானத்தை சீராக்குகிறது.