சென்னை: துளசி இலைகளைத் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும் புத்துணர்ச்சியும் துளசி இலைகள் மூலம் பெறலாம்.வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.நமது உடலுக்கான கிருமிநாசினியாக துளசியை உட்கொள்ளலாம்.
துளசி இலையைப் போட்டு ஊறவைத்த நீரைத் தொடர்ந்து பருகி வந்தால் சர்க்கரை நோய் நம்மை அண்டாது. வியர்வை நாற்றத்தை தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் மணக்கும்
துளசி இலைகளை எலுமிச்சைச்சாறு விட்டு நன்கு மை போல அரைத்து அந்த விழுதைத் தோலில் தடவி வந்தால் நாள்பட்ட சொறி , படை சிரங்குகள் கூட மறைந்துவிடும். துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வந்தால் சிறுநீர்க்கோளாறு மறையும் .
துளசி சாற்றுடன் எலுமிச்சசை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும். சுத்தமான மண்பானைத் தண்ணீரில் துளசி இலைகளை ஊறப்போட்டு அந்தத் தண்ணீரை குடித்து வந்தால் எந்த நோயும் அண்டாது .
துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மைப் பல நோய் களிலிருந்து காக்கிறது . வெட்டுக் காயங்களுக்குத் துளசி இலை சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமடையும்.