சென்னை : அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான மருத்துவ குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
டீ அல்லது காபி குடிப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒருமுறை மாலை அல்லது காலை வேளையில் பருத்திப்பால் எடுத்துக்கொண்டால் அது நமது உடலுக்கு பல நன்மைகளை சேர்க்கும்.
இதில் வைட்டமின்கள், புரதங்கள், ஆன்டி ஆக்சிடண்ட்டுகள், கனிமச் சத்துக்கள் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. இதில் நார்ச்சத்து இருப்பதால் செரிமானப் பிரச்சனையும் சரியாகும்.
சர்க்கரை நோய் தாக்காமல் இருக்க வெள்ளை சர்க்கரையை தவிர்ப்பது நல்லது என்பதை பலரும் அறிந்திருப்போம். ஆனால், அதிக அளவு சர்க்கரையை உட்கொண்டால், புற்றுநோய் தாக்கும் அபாயமும் இருக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே, வெள்ளை சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டி அல்லது பனை வெல்லம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதுவும் அளவுக்கு மீறி எடுத்துக்கொள்ள வேண்டாம்.
தினசரி 6 பல் பூண்டை வறுத்து சாப்பிடுவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கிறது. உடலில் உள்ள செல்களை பாதிக்கும் விஷயத்தை எதிர்த்து போராடுகிறது. புற்றுநோய் ஏற்படுத்தும் செல்களை அழிக்கிறது. இதய நோய் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலில் உள்ள கெட்ட வாயுக்களை வெளியேற்றுகிறது.