பனை மரத்தை நட்டு, பராமரித்து, வளர்க்க வேண்டிய அவசியம் இல்லாததால், பனை மரம் நமக்கு அதிக சிரமத்தை தருவதில்லை. பனை மரத்தின் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. அவற்றை இந்த பதிவில் காண்போம்.
பனம் பழத்தின் உள்ளே இரண்டு அல்லது மூன்று பெரிய உறுதியான காய்கள் இருக்கும். பனம் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இழைகளுக்கு இடையில் ஆரஞ்சு அல்லது சிவப்பு கலந்த மஞ்சள் கலந்த தடிமனான சாறு உள்ளது. இந்த சாறு இனிப்பு சுவை கொண்டது.
பப்பாளி மற்றும் மாம்பழத்தை விட பனம் பழத்தில் அதிக வைட்டமின் சி மற்றும் கால்சியம் உள்ளது. பனம் பழச்சாற்றில் நீர், புரதம், கொழுப்பு, உலோக உப்புகள், சர்க்கரை, வைட்டமின் சி மற்றும் கரோட்டின் ஆகியவை நிறைந்துள்ளன. குறிப்பாக, இந்த பழத்தில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது, இது கண் பார்வையை மேம்படுத்துகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பழத்தை அளவோடு சாப்பிடலாம்.
தோல் நோய்களுக்கு பனம் பழத்தின் சாற்றைத் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.
பனம் பழத்தை சாப்பிட விரும்புபவர்கள் தீ மூட்டி வறுத்து சாப்பிடலாம்.
பனம் பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தோல் நோய்களை குணப்படுத்துகிறது.
பனம் பழம் உடலுக்குத் தேவையான வெப்பத்தைத் தரும். மலச்சிக்கலை போக்குகிறது. உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களும் பனம் பழத்தை சாப்பிடலாம்.
பனம் பழச்சாறு மாவுடன் கலந்து பிசைந்து சாப்பிடுவது. தேங்காய், வாழைப்பழம், பால், சர்க்கரை சேர்த்து இனிப்புகள் செய்வார்கள். தக்காளி ஜாம் போல பனம் பழ ஜாமும் தயாரிக்கப்படுகிறது.