சென்னை: கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்திற்கு சப்போட்டா பழம் உறுதுணையாக உள்ளது.
நம் குடலானது ஆரோக்கியமாக செயல்படும் போது மலச்சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. கர்ப்பிணி பெண்களுக்கு சப்போட்டாவில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் மற்ற சத்துக்கள் அதிகளவு உள்ளதால் கர்ப்பிணிப் பெண்களும், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களும் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நம் உடலிற்கு இயற்கையாகவே ரத்தத்தை உறையவைக்கும் சக்தி வந்துவிடும். மன அழுத்தம் நீங்க நம் உடலில் இருக்கும் நரம்புகளை அமைதிப்படுத்தும் தன்மையானது சப்போட்டாவிற்கு உள்ளது. சப்போட்டா வைட்டமின் ஏ என்னும் சத்தை அதிக அளவு கொண்டுள்ளது.
அதிக அளவு வைட்டமின் ஏ-யினால் வயதான காலத்திலும் கூட, பார்வையை மேம்படுத்த உதவுகிறது. எனவே நல்ல பார்வை கிடைப்பதற்கு சப்போட்டா பழங்களை சாப்பிட வேண்டும்.
கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து முதலியவைகள் எலும்பின் தாங்கும் ஆற்றலை அதிகரிக்க தேவைப்படுகின்றன. கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்றவைகள் சப்போட்டா பழத்தில் நிறைந்துக் காணப்படுவதால், எலும்புகளின் சக்தியை அதிகரித்து மற்றும் அவற்றை வலுப்படுத்த உதவுகிறது.