சென்னை: பெரும்பாலும் பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை தடிமனான தொடைகள் ஆகும். தடிமனான தொடைகளால் ஏற்படும் பிரச்சினைகள் அது இருப்பவர்களால் மட்டுமே உணர முடியும். இப்பிரச்சனை உள்ளவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவார்கள்.
தொடையின் கொழுப்பை மட்டும் குறைப்பது என்பது நடக்காத காரியமாகும். எடைக்குறைப்பு என்பது ஒட்டுமொத்தமாக செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். நாம் எடுத்துக்கொள்ளும் ஆரோக்கியமான உணவு மற்றும் சீரான உடற்பயிற்சியானது உங்கள் உடலின் ஒட்டுமொத்த கொழுப்பை சரியான முறையில் குறைக்க உதவுமே தவிர குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கொழுப்பை யாராலும் குறைக்க முடியாது.
ஆனால் ஒட்டுமொத்த எடை இழப்புடன் உங்கள் தொடைகளை சரியான வடிவத்துடன் மாற்ற ஒரு சில வழிகள் உள்ளது.அது என்ன என்பதைத்தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.
கூடுதல் உப்பு அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் உங்கள் உடல் அதிகப்படியான தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்ளும். இது உடலில் வீக்கத்தை உண்டாக்கும். மேலும் இது உங்கள் தொடைகள் உட்பட உடலின் வடிவத்தையே மாற்றிவிடும். ஆகவே குறைந்த அளவு உப்பு உள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் தொடை சதை அதிகரிப்பதை தவிர்க்கலாம்.
அதிக எலக்ட்ரோலைட்டுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்
கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்களே எலக்ட்ரோலைட்டுகள் என அழைக்கப்படுகிறது. உங்கள் உடலில் எலக்ட்ரோலைட் அதிகமாக இருந்தால், உப்பு குறைவாகவே இருக்கும்.
வாழைப்பழங்கள், தயிர் மற்றும் பச்சை காய்கறிகளில் பல்வேறு வகையான எலக்ட்ரோலைட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது.ஆகவே இவ்வகை உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள்.
கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடும்போது உடலில் கார்போஹைட்ரேட்ஸ் கிளைகோஜனாக மாற்றப்படுகின்றன, பின்னர் அவை உங்கள் கல்லீரல் மற்றும் தசைகளில் தண்ணீருடன் சேமிக்கப்படுகிறது. நீங்கள் எவ்வளவு கார்போஹைட்ரேட்ஸ் சாப்பிடுகிறீர்களோ, அவ்வளவு தண்ணீரை உங்கள் உடல் சேமிக்க ஆரம்பித்துவிடும். அதனால்தான் குறைந்த கார்ப் உணவை உட்கொண்டதால் நான் என் உடல் எடையை குறைத்தேன் என நிறைய பேர் கூறுவதை நாம் கேட்டிருப்போம்.
அதிக புரதம் மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ணுங்கள்
புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் எடை இழப்புக்கு சிறந்ததாகும். புரோட்டின் மற்றும் ஃபைபர் நிறைந்த உணவுகள் உங்கள் வயிறு நிரம்பியதை போன்ற உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தும். இதனால் அதிக உணவு சாப்பிடுவது தடுக்கப்படுகிறது.
ஒரு இடத்தில் உள்ள கொழுப்பைக் குறைப்பது சாத்தியமில்லை என்றாலும், ஒரு குறிப்பிட்ட தசையை வலிமையாகவும், சரியான வடிவத்திலும் மாற்றுவது எளிதாக செய்ய முடியும். சில கர்ட்ஸி லன்ஜ்கள், கோபட் ஸ்குவாட் மற்றும் சுமோ ஸ்குவாட் செய்வதன் மூலம் உங்கள் தொடைகளின் சதை பகுதியை குறைக்கலாம்.
உங்களின் தொடை பருமனை குறைக்க சில பக்கவாட்டு பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான பயிற்சிகளை செய்யாமல் மாறுதலான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். இது தொடைகளின் பருமனை குறைப்பதோடு தசைகளின் வலிமையையும் அதிகரிக்க முடியும். நீங்கள் ஒரு நாள் ஸ்குவாட்ஸ் செய்யலாம், மறுநாள் வேறு உடற்பயிற்சி செய்யலாம். இதன் மூலம் நல்ல பலனை பெறலாம்.