ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகளை உடனே குறைக்க சில எளிய வழிகள் உள்ளன. இவை மழைக்காலத்திலும் அதிகமாகவே பயன்படலாம்:
மழைக்காலத்தில் ஏற்படும் பருவ மாற்றங்களைப் பொருட்படுத்திக் கொண்டு, உடலைச் சீராகக் காக்கும் பல வழிகள் உண்டு. பருவத்துக்கு ஏற்ற ஆடைகள் அணிந்து, வெளியில் செல்லும் போது குடை, ஸ்வர்ட்டர், அல்லது ரெயின் கோட் எடுத்து செல்லுங்கள். இதனால் ஒற்றைத் தலைவலியின் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
உணவுமுறையில் கவனம் செலுத்துவது முக்கியம். பதப்படுத்தப்பட்ட உணவுகள், கஃபைன், மற்றும் சாக்லேட்டை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக பழங்கள், காய்கறிகள், மற்றும் சாலட் போன்றவை உட்கொண்டு, பரவலாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
மொபைல் போன், கம்ப்யூட்டர், மற்றும் டீவியின் ஸ்க்ரீன் டைமை குறைப்பது பயனுள்ளதாக இருக்கும். அதிக நேரம் ஸ்க்ரீன்களைப் பார்ப்பது கண் நரம்புகளை பாதித்து, ஒற்றைத் தலைவலியை தூண்டலாம். மேலும், அதிக வெளிச்சம் உள்ள இடங்களில் அதிக நேரம் தவிர்க்க வேண்டும்.
ஒற்றைத் தலைவலியைக் கட்டுப்படுத்த யூக்கலிப்டஸ் ஆயில் உதவியளிக்கும். சில துளிகள் ஆயிலை எடுத்துப் பயன்படுத்தி, மசாஜ் செய்து சிறிது நேரம் ஓய்வெடுக்கவும்.
இவையெல்லாம் தலைவலியைத் தணிக்க உதவும்.