மலச்சிக்கல் பிரச்சனையால் பெரும்பாலானோர் அவதியடைந்து வருகின்றனர.இது ஒரு சங்கடமான மற்றும் விரக்தியான அனுபவமாக இருக்கலாம், ஆனால் இதற்கு நிவாரணம் பெற மருந்து தேவையில்லை. இயற்கை வைத்தியங்களில் சிலவற்றை நமது அன்றாட வழக்கத்தில் சேர்ப்பது வழக்கமான குடல் இயக்கங்களை ஊக்குவிக்க உதவும்.
இதனால் மலச்சிக்கல் சரியாகும். மலச்சிக்கலை சரிசெய்ய உதவும் 5 எளிய டிப்ஸ் .. அதிக நார்ச்சத்து உணவுகளை சாப்பிடுங்கள் : ஆரோக்கியமான செரிமானத்திற்கு நார்ச்சத்து அவசியம். எனவே நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது மலச்சிக்கலை இயற்கையான முறையில் சரிசெய்ய உதவுகிறது. இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிசின் படி, பெரியவர்கள் ஒரு நாளைக்கு 25 முதல் 34 கிராம் நார்ச்சத்தை எடுத்து கொள்ள வேண்டும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் அடங்கும். வேர்ல்ட் ஜர்னல் ஆஃப் காஸ்ட்ரோஎன்டாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை மலச்சிக்கலை சரி செய்ய உதவுகிறது என்பதை கண்டறிந்துள்ளது. அதன்படி ஆப்பிள், கேரட், பீன்ஸ் மற்றும் முழு கோதுமை ரொட்டி போன்ற உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கலை சரி செய்யலாம்.
குந்து நிலையில் உட்காரவும் : கழிப்பறையில் நாம் உட்காரும் முறையை மாற்றினால் மலச்சிக்கல் பிரச்சனையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். வெஸ்டர்ன் டாய்லெட்டுகளில் உட்காருவதை விட இந்தியன் கழிப்பறைகளில் குந்து நிலையில் உட்காருவது நமது குடலுக்கு மிகவும் இயற்கையான சீரமைப்பை உருவாக்கி, மலம் கழிப்பதை எளிதாக்குகிறது. இந்த நிலை நமது மலக்குடலில் உள்ள தசைகளை தளர்த்த உதவுகிறது. ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் காஸ்ட்ரோஎன்டாலஜி நடத்திய ஒரு ஆய்வில், குந்துதல் குடல் இயக்கத்தில் ஏற்படும் சிரமத்தை குறைக்கும் என்று கண்டறிந்துள்ளது. மூலிகை தேநீர் : மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பல நூற்றாண்டுகளாக மூலிகை தேநீர் பயன்படுத்தப்படுகிறது.
சென்னா, மிளகுக்கீரை மற்றும் டேன்டேலியன் போன்ற சில மூலிகைகள் இயற்கையான மலமிளக்கிகளாகும். ஜர்னல் ஆஃப் ஹெர்பல் மெடிசின் ஆய்வில், சென்னா டீயில் குடல் இயக்கத்தைத் தூண்டும் இயற்கையான சேர்மங்கள் நிறைந்துள்ளது. தினமும் இரவு இந்த டீயை வெதுவெதுப்பாக அருந்திவர மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியது.
இது நமது செரிமான அமைப்பை தளர்த்தவும், காலையில் குடல் இயக்கத்தை மேம்படுத்தவும் உதவும். இஞ்சி : இஞ்சி மலச்சிக்கலை போக்க உதவும் சிறந்த இயற்கை தீர்வாகும். இஞ்சியை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் செரிமானத்தைத் தூண்டுகிறது மற்றும் இரைப்பைக் குழாயில் இயக்கத்தை அதிகரிக்கிறது. காஸ்ட்ரோஎன்டாலஜி & ஹெபடாலஜி ஐரோப்பிய இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, குடல் செயல்பாடுகளை துரிதப்படுத்த இஞ்சி உதவுகிறது என தெரிய வந்துள்ளது. எனவே அடிக்கடி இஞ்சி டீ அருந்தலாம் அல்லது இஞ்சி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.
காபி : காபி குடிப்பது நமது செரிமான அமைப்பைத் தூண்டி மலச்சிக்கலைப் போக்க உதவும். இது செரிமான மண்டலத்தில் உள்ள தசைகளின் சுருக்கத்தை அதிகரிக்கிறது, குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. காஸ்ட்ரோஎன்டாலஜி & ஹெபடாலஜி ஐரோப்பிய இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், காபி அருந்துவது குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது என்று கண்டறிந்துள்ளது. எனவே தினமும் காலையில் உங்கள் நாளை ஒரு குவளை வெதுவெதுப்பான காபியுடன் தொடங்குங்கள்.