பிரவுன் அல்லது சிவப்பு அரிசி, நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது என்பதால், எடை குறைக்க விரும்பும் பலர் அதை விரும்பி உண்ணுகின்றனர். ஆனால், இது முழுமையாக ஆரோக்கியமானது எனக் கருத முடியாது என புதிய ஆய்வு எச்சரிக்கிறது.மிச்சிகன் மாநிலத்தில் நடைபெற்ற ஆய்வின் படி, பிரவுன் அரிசியில் வெள்ளை அரிசியை விட அதிக அளவு ஆர்சனிக் உள்ளது.

ஆர்சனிக் ஒரு நச்சுவாய்ந்த கனிமம், இது புற்றுநோய், நுரையீரல், சிறுநீர்ப்பை மற்றும் தோல் நோய்களுக்கு வழிவகுக்கும்.பிரவுன் அரிசியை தொடர்ந்து சாப்பிடுவது, சிறு குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும். இதனால், கற்றல் திறன், நடத்தை மற்றும் கவனச்சிதறல் கோளாறுகள் ஏற்படக்கூடும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தேசங்களில் பாஸ்பரஸ் மற்றும் பூச்சிக்கொல்லி கலந்த மண்ணில் விளையும் அரிசி, ஆர்சனிக் இருப்பை அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, பிரவுன் அரிசியில் 48% வரை ஆர்சனிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.வெள்ளை அரிசியில் 33% மட்டுமே இருப்பதாகவும், குழந்தைகள் தினமும் இதை உண்ணும்போது, அவர்களின் உடல் எடிக்கு ஏற்ப 0.29 – 0.59 மைக்ரோகிராம் வரை ஆர்சனிக் சேரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இது உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகம். ஆர்சனிக் நீண்ட காலம் உடலில் சேரும்போது, புற்றுநோய் அபாயம் கணிசமாக உயரும்.புற்றுநோய்க்கான சர்வதேச நிறுவனம், ஆர்சனிக்கான ஆபத்துகளை உணர்த்தியுள்ளது. மக்கள் உணவு தேர்வில் உணவுப் பாதுகாப்பையும் முக்கியமாக கருதவேண்டும் என ஆய்வாளர் ஃபெலிசியா வூ தெரிவித்தார்.பிரவுன் அரிசியில் உள்ள நன்மைகளைப் பொருத்தவரை, அது ஆன்டிஆக்ஸிடண்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்களில் சிறந்தது.
ஆனால், அதில் உள்ள ஆர்சனிக் அளவைக் கருத்தில் கொண்டு நுண்ணறிவு வாய்ந்த தேர்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.தொடர்ந்து பசுமை உணவுகளைத் தேர்வு செய்யும் போது, உணவின் மூலப்பொருள் எங்கே விளைந்தது, எப்படி தயாரிக்கப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ளுதல் அவசியம்.குழந்தைகளுக்கு இது இன்னும் ஆபத்தாக இருப்பதால், 6 மாதங்கள் முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு பிரவுன் அரிசியை அளிப்பதில் கவனம் தேவை.