மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) என்பது தற்போதைய வாழ்க்கைமுறையில் அதிகம் காணப்படும், ஆனால் பெரும்பாலானவர்கள் அதை காலதாமதமாகவே கண்டறிகின்றனர். இது ஆரம்பத்தில் எளிமையான தொந்தரவுகளாகத் தோன்றி, கல்லீரல் சிரோசிஸாக மாறி உயிருக்கே ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்லும். இந்நோயை துல்லியமாகவும் விரைவாகவும் கண்டறிதல் சிகிச்சைக்கான முக்கிய வாயிலாகும்.

முதன்மையான அறிகுறிகளில் ஒன்றாக, காரணமில்லாமல் தொடர்ந்து ஏற்படும் சோர்வு மற்றும் உடல் பலவீனம் குறிப்பிடப்படுகிறது. போதிய ஓய்வு எடுத்தபோதும் சோர்வும் ஆற்றல் இழப்பும் நீடிப்பது, கல்லீரல் நச்சுநீக்கம் செய்ய இயலாமை, சக்தி உற்பத்தி செயல்களில் தடை ஆகியவற்றைக் குறிக்கக்கூடும். அதேபோல், விலா எலும்புகளுக்குக் கீழே உள்ள வயிற்றின் வலது பக்க மேல் பகுதியில் ஏற்படும் வலி, செரிமான பிரச்சனையென தவறாக நம்பாமல் கவனிக்க வேண்டியது.
உணவுமுறை அல்லது உடற்பயிற்சியின்றி ஏற்படும் எடை இழப்பு, NAFLD-யின் மற்றொரு முக்கிய அறிகுறியாகும். உடலின் வளர்சிதை மாற்றக் கோளாறு மற்றும் பசி குறைபாடும் காரணமாக இருக்கலாம். ஆரம்ப கட்டங்களில் அறிகுறிகள் தெரியாவிட்டாலும், சில ரத்த பரிசோதனைகள் மூலம் கல்லீரல் நொதிகள் மற்றும் திசு சேதம் தெரியவரலாம். இது தொடர்ந்தால், சிரோசிஸ் எனப்படும் தீவிர நிலைக்கு செல்லும் அபாயம் உள்ளது.
சிரோசிஸ் ஏற்பட்டால், மஞ்சள் காமாலை, இரவுக்கு மோசமாகும் அரிப்பு, உடலில் திரவம் குவிவது, சிராய்ப்பு மற்றும் இரத்தப்போக்கு, மன உறுதி குறைபாடு போன்ற கடுமையான அறிகுறிகள் தென்படும். குறிப்பாக தொப்பை அதிகம் உள்ளவர்கள், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதற்கான அதிக ஆபத்துடன் இருக்கின்றனர். எனவே, இந்த அறிகுறிகள் தென்பட்டதும் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.