சாண்ட்விச், சாலட்கள் போன்ற பல வகை உணவுகளில் அதிக சுவைக்காக பயன்படுத்தப்படும் க்ரீமியான மயோனைஸ், அந்த உணவுகளை மேலும் சிறப்பாக உணர வைக்கிறது. உலகம் முழுவதும் பிரபலமாகி வரும் மயோனைஸ், அதன் சுவைக்கேற்ப மட்டுமன்றி, இதய ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களால் கூட பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இது உணவுகளில் சுவையை அதிகரிப்பதுடன், சில உடல்நலக்கேடு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், அதைப் பற்றிய சரியான புரிதல் அவசியம். MGM ஹெல்த்கேரில் மூத்த ஆலோசகராக பணியாற்றும் மருத்துவர் டி. மதன் மோகன், மயோனைஸில் கலோரி மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால் இதய ஆரோக்கியத்திற்கே தீங்கு விளைவிக்கக்கூடும் என எச்சரிக்கிறார். எனவே அதை மிதமான அளவில் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றார்.
மயோனைஸ் என்பது முட்டை, எண்ணெய் மற்றும் வினிகரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஒரு டேபிள்ஸ்பூன் அளவு மயோனைஸில் சுமார் 90 கலோரி இருக்கும். இதை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது, எடை அதிகரிக்கலாம், ரத்த சர்க்கரையும் கொலஸ்ட்ராலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது நீரிழிவு, இதய நோய் போன்ற பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கலாம்.
மயோனைஸில் உள்ள ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட்கள், உடலுக்கு தேவையானவை என்றாலும், இதை அதிகமாக உட்கொண்டால் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 அமிலங்களின் சமநிலையை பாதிக்கலாம். இது உடலில் வீக்கம் ஏற்பட காரணமாகிறது.
மயோனைஸ் வெப்பத்தில் கெட்டுப்போகும் உணவாகவும் இருப்பதால், தவறான சேமிப்பு முறைகள் பாக்டீரியா வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இது உணவுப் பாய்ச்சன், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு காரணமாகும். எனவே, அதை எப்போதும் குளிர்சாதனத்தில் வைத்திருக்க வேண்டும்.
மயோனைஸில் நார்ச்சத்து மற்றும் புரதம் குறைவாக இருப்பதால், இது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் தடையாக இருக்கலாம். அதிகளவில் சாப்பிடும் போது நீரிழிவு அபாயமும் உயரும்.
அதே சமயம், இதில் உள்ள நல்ல கொழுப்புகள், குறிப்பாக அடர்த்திய குறைந்த கொலஸ்ட்ராலை குறைக்கும் திறனுடையவை. ஆலிவ் எண்ணெய் அடிப்படையிலான மயோனைஸை தேர்வு செய்வது சிறந்தது. ஆனால் இதையும் அளவோடு சாப்பிட வேண்டும்.
சில மயோனைகளில் நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் இருக்கலாம். இது “கெட்ட” கொலஸ்ட்ராலை அதிகரித்து, இதய நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே லைட் வெர்ஷன் அல்லது ஆரோக்கிய எண்ணெய்களால் தயாரிக்கப்பட்ட மயோனைஸ் பாதுகாப்பானது.
மயோனைஸ் அளவுக்கு மேல் சாப்பிடுவதால் எடை கூடும். இது தானாகவே கொலஸ்ட்ரால் மற்றும் இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதனால், சீரான உணவுப் பழக்கத்துடன் சேர்த்து அளவாக சாப்பிடுவது நல்லது.
மயோனைஸ் விருப்பமுள்ளவர்கள், அதன் எதிர்விளைவுகளை குறைக்க, பழங்கள், காய்கறிகள் மற்றும் நன்றாக சீரான உணவுகளுடன் சேர்த்து உண்பது சாலச்செயல்.
மேலும், கிரீக் யோகர்ட், அவகேடோ ஸ்ப்ரெட்ஸ், ஆலிவ் ஆயில் அடிப்படையிலான மாற்றுகளைத் தேர்வு செய்வதன் மூலம் சுவையையும் ஆரோக்கியத்தையும் இணைக்கலாம்.
சுருக்கமாகச் சொன்னால், மயோனைஸ் சுவையாக இருந்தாலும், அதை சிக்கலின்றி அனுபவிக்க, அளவோடு மட்டுமே சாப்பிட வேண்டும்.