சென்னை: குப்பைமேனிதாங்க… பேருக்கும்… செயலுக்கும் சம்பந்தம் இல்லையேன்னு நினைக்காதீங்க… இதில் உள்ள மருத்துவத்தன்மைகள் நிறைய உள்ளது.
குப்பைமேனி கசப்பு, காரச் சுவை, வெப்பத் தன்மை கொண்டது. ஆனால் இதன் பயன்கள் எதற்கு எல்லாம் பயன்டுது தெரியுங்களா? மார்புச்சளி, சுவாசகபம், கபநோய்கள், கீல்வாதம் போன்றவற்றை போக்கும் அருமருந்தாக உள்ளது குப்பைமேனி.
குப்பைமேனி இலையை நன்றாக அலசிவிட்டு நீரில் கொதிக்கவைத்து குடித்து வந்தால் குடல் புழுக்கள் அழிந்துவிடும். உடல் பருமன், கொழுப்பைக் குறைக்கும். இதிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது.
தோல் நோயா… கவலையே வேண்டாம்… குப்பைமேனி இலைச்சாற்றுடன் தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் குழைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசிவாங்க… தோல் நோய் சொல்லிக் கொள்ளாம ஓட்டம் பிடிக்கும். நீண்ட காலமாக உள்ள தோல் நோய்களுக்கு, குணமாகும்வரை, ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் வீதம் இப்படி செய்தால் விரைவில் குணமாகும்.
மூலநோயால் பாதித்தவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டாலும் மீண்டும் வரும். இதற்கு மூலிகை மருந்துகள் நல்ல பயன் தரும். ஆசனமூலம், பக்க மூலம், சிந்திமூலம், மேக மூலம், சரக்கண்ட மூலம், மாலைமூலம், கொடிமூலம், கண்டமாலை என எட்டு வகைப்படும்.
பதினெட்டு வகை என்றும் சொல்லுவாங்க… இந்த மூல நோய்க்கு குப்பைமேனி சிறந்த மருந்தாகும் தெரியுங்களா? பூத்த குப்பைமேனியை வேறுடன் பிடுங்கி நிழலில் உலர்த்தி சூரணம் செய்து 2 – 5 கிராம் அளவு பசும் நெய்யில் காலை மாலை 48 நாள் சாப்பிட எந்தவகை மூலமாக இருந்தாலும் சரி… முற்றிலும் குணமாகும். அந்தளவிற்கு குப்பைமேனி மருத்துவ குணம் உடையது.
எந்த வகையான புண்களாக இருந்தாலும் சரி குப்பை இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூச குணமடையும், மேனி மீண்டும் எழிலோடு விளங்கும் தெரியுமா. குப்பைமேனிச் செடியின் இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து இலேசாக நசுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, கஷாயமாக்கி, வடிகட்டிக் குடிக்க சளி, இருமல் கட்டுப்படும்.
பெயர்தான் குப்பைமேனி… ஆனால் குணமோ… மருத்துவ மேனி என்றுதான் சொல்லணும்…