கல்லீரல் நம் உடலில் 500க்கும் மேற்பட்ட முக்கிய பணிகளைச் செய்கிறது. இரத்தத்தை சுத்திகரிப்பது, நச்சுகளை அகற்றுவது, ஊட்டச்சத்துகளை சேமிப்பது, கொழுப்பு சிதைவு மற்றும் இரத்தச் சர்க்கரையை கட்டுப்படுத்துவது ஆகியவை அதில் அடங்கும். எனவே கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம்.
புளோரிடாவைச் சேர்ந்த குடலியல் நிபுணர் டாக்டர் ஜோசப் சல்ஹாப், தனது உணவில் அடிக்கடி சேர்க்கும் மூன்று காய்கறிகள் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன என்று கூறியுள்ளார்.

1. ப்ரோக்கோலி
ப்ரோக்கோலியில் உள்ள சல்போராபேன் எனப்படும் சேர்மம், கல்லீரலின் நச்சு நீக்கும் இயற்கை செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதனால் உடலில் சேரும் தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் அகற்றி, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. ப்ரோக்கோலி பிடிக்காதவர்கள் முட்டைகோஸ், கேல், பிரஸ்ஸல்ஸ் ஸ்பிரவுட்ஸ் போன்ற கிருசிபெரஸ் காய்கறிகளையும் சாப்பிடலாம்.
2. பீட்ரூட்
பீட்ரூட்டில் உள்ள பீட்டாலைன்கள் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடண்ட்களாகும். அவை கல்லீரல் செல்களில் ஆக்ஸிடேடிவ் ஸ்டிரெஸை குறைத்து, கல்லீரல் என்சைம்களை சரியான நிலையில் வைத்திருக்க உதவுகின்றன. குறிப்பாக கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது சிறந்தது. பீட்ரூட்டை ஜூஸ் ஆகவோ, சாலட்டில் சேர்த்தோ எடுத்துக்கொள்ளலாம்.
3. ஆர்டிசோக்ஸ்
ஆர்டிசோக்ஸில் உள்ள சினாரின் எனப்படும் ஆன்டிஆக்ஸிடண்ட், கல்லீரல் செல்களை பாதுகாப்பதோடு சேதமடைந்தவற்றை மீண்டும் உருவாக்கவும் உதவுகிறது. மேலும், பித்த உற்பத்தியை தூண்டி, செரிமானத்தையும் கொழுப்பு சிதைவையும் எளிதாக்குகிறது.
👉 இந்த மூன்று காய்கறிகளையும் உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால், கல்லீரல் ஆரோக்கியமாகவும் திறம்படச் செயல்படவும் உதவுகிறது.