இரவு முழுவதும் தொடர்ந்து தூங்க முடியாமல் போவது பலருக்கும் சாதாரண பிரச்சனையாக தோன்றலாம். ஆனால், நான்கு மணிநேரத்திற்கு குறைவாக தூங்குவதால் உடல் பல பாதிப்புகளை சந்திக்கிறது. மும்பை பரேல் க்ளெனீகிள்ஸ் மருத்துவமனையின் உள் மருத்துவ மூத்த ஆலோசகர் டாக்டர் மஞ்சுஷா அகர்வால் கூறும் போது, இரவில் அடிக்கடி எழுவதற்கு மன அழுத்தம், தவறான தூக்கப் பழக்கங்கள், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் சில மருத்துவ நிலைகள் காரணமாக இருக்கலாம்.

முதலாவதாக, மன அழுத்தம் மற்றும் பதட்டம் இரவில் விழிப்பைப் அதிகரிக்கும் முக்கிய காரணிகள் ஆகும். படுக்கைக்கு முன் காஃபின் கலந்த பானங்களை குடிப்பது, சில மருந்துகளை எடுத்துக் கொள்வது, ஆசிட் ரிஃப்ளக்ஸ், ஆஸ்துமா, சிறுநீர்ப்பை பிரச்சனைகள் போன்றவை இரவு விழிப்புக்கு பங்களிக்கலாம். குறிப்பாக வழக்கத்திற்கு மாறான தூக்க நேரம், மின்னணு சாதனங்கள் பயன்படுத்துவது போன்ற பழக்கங்கள் உடலும் மனமும் போதுமான ஓய்வை பெறாததற்குக் காரணமாகும்.
டாக்டர் அகர்வால் மேலும் கூறுகிறார், “இரவில் நல்ல தூக்கம் இல்லாதது உடலில் ஏதோ சரியில்லை என்பதற்கான ஒரு எச்சரிக்கை அறிகுறியாகும். இது தொடர்ந்து நிகழ்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி காரணத்தை கண்டறிய வேண்டும்.” குறைந்த தூக்க நேரம் நாளொவ்வொருநாள் மனச்சோர்வு, சோர்வு, எரிச்சல் ஆகியவற்றைக் கூட அதிகரிக்கிறது.
வாழ்க்கை முறையை மாற்றுவதும் இந்த பிரச்சனையை சரிசெய்ய உதவும். தூக்க அட்டவணையை பராமரித்தல், காஃபினை தவிர்த்தல், மன அழுத்தத்தை நிர்வகித்தல் மற்றும் ஆரோக்கிய உணவு பழக்கங்களை பின்பற்றுதல் முக்கியம். உடல் எச்சரிக்கைகளை சாதாரணமாக எண்ணி கவனிக்காமை நோயறிதலுக்கும், சிகிச்சைக்கும் தடையாக இருக்கும்.