பொதுவாக பலர் இன்று வாய் துர்நாற்ற பிரச்சினையால் அவதி படுவர் .இந்த வாய் துர்நாற்ற பிரச்சினைக்கு இயற்கை முறையில் பல்வேறு சிகிச்சை முறையுண்டு அது பற்றி நாம் இந்த பதிவில் காணலாம்
கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள் , மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.
பல வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி. * உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது. * ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது.
வயிற்றுக் கோளாறு உள்ளவர்களுக்கும் , அல்சர் நோய் உள்ளவர்களும் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள். புகையிலை, வெற்றிலை, பாக்கு போடுதல், உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது.
உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் பையிலிருக்கும் அமிலமானது மேல்நோக்கி வந்து போகும். இதனாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
மேலும் சிலர் அஜீரணம் சம்பந்தமான கோளாறுகளால் அல்லல் படுவர் .இப்படி அவதிபடுபவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்படும். சாதாரணமாக உணவுக்குழாயில் செல்லும் உணவானது நான்கு மணி நேரத்திற்குள் ஜீரணமாகிவிட வேண்டும்.