
உடல் எடையை குறைக்க விரும்புவோர் வெள்ளை சாதம், பாஸ்தா போன்றவை தவிர்க்க வேண்டிய உணவுகளாக பொதுவாகக் கூறப்படுகின்றன. இதில் அதிக கார்போஹைட்ரேட்டுகள் உள்ளதால், அவை உடலில் ரத்த சர்க்கரையை உடனே அதிகரிக்கச் செய்கின்றன. ஆனால் சமீபத்திய உணவு அறிவியல் கண்டுபிடிப்புகள் இதை மாற்றக்கூடிய ஒரு எளிய வழியை சுட்டிக்காட்டுகின்றன.

வெள்ளை சாதம், பாஸ்தா, உருளைக்கிழங்கு போன்றவை “எதிர்ப்பு தன்மை கொண்ட ஸ்டார்ச்” என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு வகை மாவுச்சத்தாக மாற்றலாம். இதைச் செய்வது மிகவும் எளிது. சாதம் அல்லது பாஸ்தாவை சமைத்த பிறகு உடனே சாப்பிடாமல், அதை குளிர வைத்துவிட்டு பிறகு அறை வெப்பத்தில் கொண்டு வந்து சாப்பிட வேண்டும்.
இந்த முறையில் அவை செரிமானத்துக்கு மந்தமாக மாறி, ரத்த சர்க்கரையை மெதுவாக உயர்த்தும்.இது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. சிறுகுடலை தவிர்த்து பெருகுடலில் செரிமானமாகும் இந்த ஸ்டார்ச், நன்மை தரும் நுண்ணுயிரிகளை ஊட்டி உடலுக்கு தேவையான குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்களை உருவாக்குகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தி, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இது போன்ற மாவுச்சத்து, ப்ரீ-பயோடிக் போன்று செயல்பட்டு நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு துணையாகிறது. மேலும், கார்போஹைட்ரேட்டுகள் மெதுவாக உறிஞ்சப்படுவதால் இன்சுலின் நிலைகள் சமநிலையுடன் இருக்கும். சாதத்தை மீண்டும் சூடாக்கினாலும் அதன் எதிர்ப்பு தன்மை மாறாது.இந்த மாதிரியான யுக்திகளை பின்பற்றி வெள்ளை சாதம் மற்றும் பாஸ்தாவை ஒரு சூப்பர் ஃபுட் ஆக மாற்றலாம். இதே முறையை உருளைக்கிழங்கு மீதும் பயன்படுத்த முடியும். இவை அனைத்து வயதினருக்கும் ஏற்றது. நீண்ட நாள் ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்காற்றும்.உடல் எடையை கட்டுப்படுத்த விரும்பும் அனைவரும் இந்த இயற்கையான, சுலபமான முறையை கையாளலாம்.