உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க எலும்புகளின் வலிமை மிக முக்கியமானது. வயதானவர்கள் மட்டுமல்ல, மெனோபாஸ் நிலை மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் உள்ள பெண்களிலும் எலும்பு பலவீனமடைவது அதிகம் காணப்படுகிறது. இதனால் எளிதில் எலும்பு முறிவுகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இந்த நிலையை தவிர்க்க இயற்கையான முறையில் எலும்புகளை வலுப்படுத்த சில யோகா மற்றும் டயட் குறிப்புகள் உதவுகின்றன.

வீரபத்ராசனம், விருக்ஷாசனம், சேது பந்தாசனம், தாடாசனம் மற்றும் அதோ முக ஸ்வானாசனம் போன்ற யோகா ஆசனங்கள் இடுப்பு, தொடை, முதுகு மற்றும் தோள்களுக்கு வலிமை தருகின்றன. இவை எலும்பு அடர்த்தியை அதிகரித்து, விழும் அபாயத்தைக் குறைக்கும்.
உணவிலும் சரியான மாற்றங்கள் தேவை. வைட்டமின் சி அதிகம் உள்ள காய்கறிகள், கால்சியம் நிறைந்த பால் மற்றும் பால் பொருட்கள், ராகி, டோஃபு, எள், கீரை போன்ற உணவுகள், வைட்டமின் டி கிடைக்கும் சூரியஒளி, முட்டை மஞ்சள், கொழுப்பு மீன்கள், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ள பருப்பு வகைகள், மற்றும் வைட்டமின் கே உள்ள இலைகீரைகள் எல்லாம் எலும்புகளுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன.
முழுமையான ஆரோக்கியம் எலும்பு வலிமைதான் அடித்தளமாகும். எடையைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகளோடு, யோகா மற்றும் சரியான உணவுகளை ஒருங்கிணைத்து மேற்கொண்டால், எலும்புகள் நீடித்த காலத்திற்கு வலிமையுடன் இருக்கும்.