தஞ்சாவூர்: மத்திய அமைச்சர் சிரா்க் பாஸ்வான் ஜி பிறந்தநாள் விழாவை ஒட்டி தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தில் இனிப்புகள் மற்றும் மதிய அறுசுவை விருந்து வழங்கி கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக கொண்டாடினர்.
லோக்சனா சக்தி கட்சியின் தேசிய தலைவரும், மத்திய உணவுப் பாதுகாப்பு துறையின் அமைச்சருமான சிரா்க் பாஸ்வான் ஜி பிறந்தநாளை முன்னிட்டு, தஞ்சாவூரில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஜனசக்தி மாஸ்தூர் சபா மாநில செயலாளர் தஞ்சாவூர் கருணாகரன் தலைமையிலும், தஞ்சை மாவட்ட தலைவர் நாஞ்சில் விஜய் முன்னிலையிலும் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனை மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் (நிப்டம்) பணியாளர்கள் மற்றும் ஊழியர்களை நேரில் சந்தித்து, மத்திய அமைச்சரின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் அவர்களுக்கு இனிப்புகள் மற்றும் மதிய அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டன. மத்திய அமைச்சர் சிரா்க் பாஸ்வான் ஜி பிறந்தநாள் விழாவை தஞ்சாவூரில் உற்சாகமாக கொண்டாடி பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் ஜனசக்தி மாஸ்தூர் சபா மாநில செயலாளர் தஞ்சாவூர் கருணாகரன் தொடர்து செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
