மதுரை: மதுரைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன், முதலமைச்சர் விஜயை வரவேற்று சால்வை அணிவித்து கௌரவித்தார்.
அப்போது மூத்தவரான ருக்மணி பழனிவேல் ராஜனுக்கு விஜய் மரியாதை செலுத்தி ஆசி பெற்றார். இந்த காட்சிகள் கோவில் வளாகத்தில் இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தன.
அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் மரியாதை
ருக்மணி பழனிவேல் ராஜன், முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக அரசியல் கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில், கோவில் அறங்காவலர் குழுத் தலைவரை முதலமைச்சர் விஜய் மரியாதையுடன் சந்தித்தது அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
