புதுடில்லி: மத்திய அரசுப்பணிகளில் நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசுப்பணிகளில் நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு துறைகளில், இணை செயலர், இயக்குனர்கள், துணை செயலர்கள் என 45 பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதி வாய்ந்த நிபுணர்களை நேரடி பணி நியமனம் செய்ய மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இதற்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த நடைமுறையை ரத்து செய்யுமாறு யு.பி.எஸ்.சி தலைவர் பிரீத்தி சூடனுக்கு அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், நேரடி நியமனத்தால் சமூகநீதி பாதிக்கப்படக் கூடாது என்பதில் பிரதமர் மோடி உறுதியுடன் இருப்பதாகவும், வேலைவாய்ப்புகளில் சமூகநீதியை நிலை நாட்ட இட ஒதுக்கீடு அவசியம் என பிரதமர் வலியுறுத்தியிருப்பதாகவும் கூறியுள்ளார்.