சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர்கள் இணைந்து அடுத்து வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தலித் நபரை முதல்வர் வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
நாட்டில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் பாஜகவால் காலூன்ற முடிய வில்லை. இதன் காரணமாக தற்போது பாஜக ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளதாம். அதாவது சமீபத்தில் தமிழகத்தில் எந்த காலத்திலும் ஒரு தலித் முதலமைச்சர் ஆக முடியாது என விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் மிகவும் ஆதங்கத்துடன் பேசி இருந்தார். இதைத்தொடர்ந்து பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பொதுமக்கள் எங்களுடன் சேர்ந்து பயணித்தால் நிச்சயம் ஒரு தலித்தை முதல்வராக்குவோம் என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர்கள் இணைந்து அடுத்து வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தலித் நபரை முதல்வர் வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் மூலம் மேலும் சில கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு வரும் என்று தமிழக பாஜக கணக்குப் போட்டுள்ளது.
மேலும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் தலித் ஒருவர் முதல்வர் வேட்பாளராக நியமிக்கப்பட்டால் தாமரை மலர வாய்ப்பு உள்ளதாக கருதி இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த புதிய தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.