சென்னை: மின் கண்டன உயர்வை எதிர்த்து வரும் 23-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சியான அதிமுக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி 23-ம் தேதி அன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நேற்று தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டு உள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு கணக்கீடு செய்யப்படும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கு பல்வேறு கட்சிகளும் தனது கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில் அதிமுக அரசு தனது வலுவான கண்டனத்தை தெரிவித்துவருகிறது.
இந்நிலையில் திமுக அரசு பதவி ஏற்ற 3 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை 3 முறை மின்கட்டணம் உயத்தப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவற்றை நிறுத்தும் முயற்சியையும் கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 23ஆம் தேதி அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எதிர் கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார்.
அதாவது கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும், இந்த கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற ஜூலை 23-ல் செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணி அளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.