சென்னை : தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் கருத்துக்கணிப்பு மேற்கொள்ள வேண்டும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். எதற்காக தெரியுங்களா?
இதுகுறித்த X பதிவில், மாணவர்கள் கற்க விரும்பும் மொழிகளை அறிந்து, அதனடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
தமிழில் பட்டம் பெற்றுள்ள இளைஞர்களுக்கு எல்லையோர மாவட்டங்களிலுள்ள பள்ளிகளில், தமிழ் ஆசிரியர் பணியை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்களிடம் கருத்துக்கணிப்பும் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.