சென்னை : புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் அண்ணாமலை காலணி அணிந்தார்.
வெளிநாட்டுக்குச் சென்று திரும்பிய அண்ணாமலை, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் வரை காலணி அணிய மாட்டேன் எனக் கூறியிருந்தார்.
அதன்படி காலணி அணியாமல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் சென்னை நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், அவரை காலணி அணியும்படி வேண்டுகோள் விடுத்தார்.
அவரும், எல்.முருகனும் காலணி அளிக்க அண்ணாமலை வாங்கி அணிந்து கொண்டார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது இதில் அதிமுக பாஜக இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.