சென்னை: தீபாவளிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் முடிவுக்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி, தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கப்படும் என்ற தமிழக அரசின் முடிவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 8182 புதிய பேருந்துகளை வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டதாகவும், ஆனால், மூன்றரை ஆண்டுகளில் 1088 புதிய பேருந்துகள் மட்டுமே வாங்கப்பட்டதாகவும், மீதமுள்ள பேருந்துகளை குறித்த காலத்தில் வாங்க முடியாத அளவுக்கு தமிழக அரசை தடுத்தது யார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு காலாவதியான பேருந்துகளின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கு அளவுக்குக் கூட புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.