அவனியாபுரம்: புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, அ.தி.மு.க., – பா.ஜ..க., கூட்டணி குறித்து, திண்டுக்கல் சீனிவாசன் பேசியது குறித்து கேட்டதற்கு, ”தேர்தல் வரும்போது, எது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம்.
கட்சியை பலப்படுத்தும் உறுப்பினர் சேர்க்கை மட்டுமே இப்போதைக்கு எங்களின் பணி. கூட்டணி குறித்து நமது தேசிய தலைவர்கள் முடிவு செய்வார்கள். மத்திய அரசின் திட்டங்கள் இந்தியில் உள்ளன.
தமிழில் மொழிபெயர்த்தால்தான் மக்களுக்குப் புரியும். இப்பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்,” என்றார்.