சென்னை: தமிழக அரசு வரி கட்ட தவறினால் சட்டப்பிரிவு 356 பிரிவு பாயும். தமிழகத்தில் ஆட்சிக் கலைப்பு ஏற்படும் என்பது போல் பாஜக தலைவர் மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசு வரி செலுத்தத் தவறினால் சட்டப்பிரிவு 356 பாயும் என்று பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் மிரட்டல் விடுத்துள்ளார். ஏற்கெனவே, தமிழகத்தில் 1975, 1980, 1988, 1991 ஆகிய ஆண்டுகளில் இந்த சட்டப்பிரிவை பயன்படுத்தி ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது.
தற்போது, மத்திய, மாநில அரசுகளுக்கிடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் பாஜக இந்த ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.