பெரம்பலூர்: தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெரம்பலூரில் நேற்று இரவு நடந்தது. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பேசியதாவது:- வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைக்க கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும்.
இம்மாதம் நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முகாம்களில் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று விடுபட்ட பெயர்கள் மற்றும் திருத்தம் செய்ய உதவ வேண்டும். தலைவர் விஜய் விரைவில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக சென்று தொண்டர்களை சந்திக்க உள்ளார்.
தவெக ஆரம்பிக்கும் முன்னரே உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 127 ஆசனங்களைப் பெற்றுள்ளோம். தற்போது கட்சி தொடங்கப்பட்டுள்ளதால், அனைத்து தேர்தல்களிலும் நிச்சயம் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.